21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது : மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் திகதி அறிவிப்பு!!

7508

பயணக் கட்டுப்பாடு..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 21ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு,

எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 23ம் திகதி இரவு 10 மணி முதல் 25ம் திகதி அதிகாலை வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இந்த காலப் பகுதியில் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.