கொரோனாவிற்கு பலியான அப்பா, அம்மா : 2 மாத குழந்தைக்கு தாயாக மாறிய 7 வயது அக்கா!!

1036

இந்தியா..

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 45 நாள் பச்சிளம் குழந்தைக்கு தாயாகி மாறியுள்ளார் அவனுடைய 7 வயதேயான அக்கா. ஒடிசாவின் Nimatpur கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் Kamalesh Panda- Smita Panda, Kamalesh ரயில்வேயிலும், Smita பகுதிநேர செவிலியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களுக்கு கிருஷ்ணா என்ற 7 வயது பெண் குழந்தை உள்ள நிலையில், 2வதாக கர்ப்பம் தரித்திருக்கிறார் Smita. 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, செவிலியராக பணியை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் Smitaக்கு கொரோனா பாசிடிவ் என வர, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு, அழகாக ஆண் குழந்தையை பெற்றெடுத்த போதும், ஏழு நாட்களில் சிகிச்சைபலனின்றி Smita காலமானார்.

தொடர்ந்து Smita-ன் கணவருக்கும் கொரோனா தொற்று காரணமாக அவரும் ம.ரணடைந்துள்ளார். தாய், தந்தை இருவரும் உ.யிரிழக்க, பச்சிளம் குழந்தையுடன் அனாதையானார் கிருஷ்ணா.

இவர்களை Smita-ன் கொழுந்தனார் அழைத்து சென்று பத்திரமாக பாதுகாத்து வருகிறார். தன்னுடைய தம்பிக்கு உணவு வழங்குவதும், பாட்டு பாடி தூங்க வைப்பது என தம்பிக்கு தாயாக மாறிவிட்டார் கிருஷ்ணா.

இந்நிலையில் தினக்கூலியான தனக்கு குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலை இருப்பதாகவும், அரசாங்கம் அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் கிருஷ்ணாவின் சித்தப்பா கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.