நகை அடகு கடைகளில்..
நாடு முழுவதும் நேற்றைய தினம் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நகை அடகுபிடிக்கும் நிலையங்களுக்கு வெளியே மக்களின் நீண்ட வரிசைகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குப் பிறகு நேற்று நகை அடகுபிடிக்கும் நிலையங்கள் திறக்கப்பட்டன, இதன் போது பலர் தங்கள் உடமைகளை அடகு வைக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கோவிட் தொற்றுநோயின் விளைவாக அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அன்றாட வருமானத்தை ஈட்ட முடியாததால் மக்கள் தங்கள் நகைகளை அடகு வைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பில் உள்ள நகை அடகுபிடிக்கும் நிலையங்களுக்கு வெளியே வரிசையில் நிற்கும் மக்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம் பொது மக்களின் அவல நிலையை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா எடுத்துரைத்தார்.