வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் வாகன நெரிசல் : மாற்று பாதையூடாக பயணிக்கும் வாகனங்கள்!!

1386

வாகன நெரிசல்..

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று (22.06.2021) மதியம் பாரவூர்தியொன்று பழுதடைந்து வீதியில் நின்றமையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் மாற்று பாதையூடாக வாகனங்கள் பயணித்தன.

புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் பாரவூர்தியொன்று மணிக்கூட்டு கோபுர சந்தியில் பழுதடைந்து நின்றது. இதன் காரணமாக புகையிரத நிலைய வீதி – வவுனியா நகர் வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.

இதன் போது வாகனத்தினை திருத்தும் பணிகள் பல மணிநேரமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை பயணிக்கவில்லை அதனையடுத்து புகையிரத நிலைய வீதியூடாக நகர் நோக்கி பயணிக்கும் வாகனங்களை நகரசபை வீதியுடான மாற்றுப்பாதையுடாக சென்றன.

வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.