5 பெண்களை திருமணம் செய்த சாமியார் : விதவிதமான தோற்றத்தில் ஏமாற்றியது அம்பலம்!!

625

இந்தியாவில்..

இந்தியாவில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற போலி சாமியார் கடந்த 2005ல் மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதன்பின் 2010ல், பரோலியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவருடனும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மீண்டும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.

இதைத்தொடர்ந்து 2014ம் ஆண்டு அனுஜ் மூன்றாவதாக திருமணம் செய்தார். அடுத்த சில காலங்களில் 3வது மனைவியின் உறவு பெண் ஒருவரை அனுஜ் நான்காவதாக திருமணம் செய்து கொண்டார்.

முந்தைய திருமணங்கள் குறித்து அறிந்து கொண்ட அந்த பெண் அ.திர்ச்சியடைந்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இதையடுத்து 2019ல் அனுஜ் மீண்டும் ஒருவரை 5வதாக திருமணம் செய்து கொண்டார்.

தனது 5வது மனைவியை அனுஜ் து.ன்.பு.று.த்.தி.ய.தா.ல் அவர் பொலிசில் புகாரளித்துள்ளார். இதனால், அவர் இதுவரை முறையாக விவாகரத்து பெறாமல் 5 திருமணம் செய்தது அவரது மனைவிகளுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்கள் இதுகுறித்து பொலிசில் புகாரளித்துள்ளனர். இதை தொடர்ந்து பொலிசார் அனுஜ் பாபாவை கைது செய்துள்ளனர். விதவிதமான தோற்றங்களில் பெண்களை ஏமாற்றிய அனுஜ் பாபாவிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் அவரின் பல லீலைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.