வவுனியா குழுமாட்டு சந்தியில் ம.து.பானங்களை ஏற்றி வந்த பாரவூர்தியினால் ஸ்தம்பித்த போக்குவரத்து!!

2986

ஸ்தம்பித்த போக்குவரத்து..

வவுனியா குழுமாட்டு சந்திக்கு அண்மித்த பகுதியில் ம.து.பானங்களை ஏற்றி வந்த பாரவூர்தியினால் 30 நிமிடங்களுக்கு மேலாக அப்பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.

வவுனியா மன்னார் பிரதான வீதியின் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக குழுமாட்டு சந்திக்கு அண்மித்த பகுதியில் ஒரு வழி பாதையூடாக மாத்திரமே வாகனங்கள் செல்வதற்கு வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் குழுமாட்டு சந்தியில் அமைந்துள்ள ம.து.பா.ன விற்பனை நிலையத்திற்கு ம.து.பா.னங்களை இறக்க வந்த பாரவூர்தி வீதியில் தரித்து நின்று ம.து.பா.னங்களை இறக்கியமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

மாலை நேரம் என்பதனால் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த பேரூந்துகள் , அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாடு பேரூந்துகள் , மோட்டார் சைக்கிள்கள் , கார் என நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.