கிருமி நீக்கம்..
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி அறிவுறுத்தலின் பேரில் இராணுவத்தினர் இன்று (24.06.2021) காலை வவுனியா நகரின் பொது இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் கிருமிநாசினி தெளித்து கிருமிநீக்கம் செய்தனர்.
அதன்படி வவுனியா நகரப் பகுதியின் பேருந்து தரிப்பிடம், நலன்புரி மையங்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், மக்கள் கூடும் இடங்கள், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் போன்ற பொது இடங்களில் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகர்கள், நகரசபை பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தண்ணீர் அடித்தும் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.