டெல்டா வைரஸ்..
உலகளவில் பரவியுள்ள வைரஸ்கள் இந்திய வைரஸான டெல்டா வைரஸிற்கு மாற்றமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகவே, நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தொற்று நோய்கள் மற்றும் கோவிட் – 19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதலாம் அலையில் எமக்கு பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்ற போதும் தற்போது வைரஸ் தன்மை மாறுபட்டு அல்பா என்ற வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.
மரணங்களும், தொற்றாளர் எண்ணிக்கையும் 50 சத வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார துறையும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.