இராணுவ ரக்வண்டி விபத்து : இருவர் பலி, நால்வர் படுகாயம்!!

1084

விபத்து..

மட்டக்களப்பு – செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டுவிலகி பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்குக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சென்ற இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை நீரோடையிலிருந்து ரக்வண்டியை கரைசேர்க்கும் நடவடிக்கையில் கனரக வாகனம் கொண்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதுடன், ஒருவரின் சடலத்தைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வி.சாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.