இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

1124

அரிசி…

இலங்கையில் இன்னும் ஒரு மாதத்திற்கு மாத்திரமே நுகர்வோருக்கு அரிசி கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாட்டில் எதிர்வரும் நாட்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நெல் ஆலை உரிமையாளர்கள் வழங்கிய தரவுகளுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் உடனடியாக ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்தால் மாத்திரமே தட்டுப்பாடினை தவிர்க்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-