இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட உள்ள குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல!!

758


குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல..


இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட உள்ளனர்.தற்பொழுது இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு வீரர்களையும் மீள அழைப்பதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.


கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளில் ஒன்றான உயிர்குமிழி நடைமுறையை மீறி இரவில் வீதியில் சுற்றித் திரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பிலான காணொளியொன்றும் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில், குறித்த இரண்டு வீரர்களையும் மீள அழைத்து விசாரணை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் வெளியே உலவியமை குறித்து அணி முகாமைத்துவத்திடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரையும் லண்டனிலிருந்து உடனடியாக விமானம் மூலம் திருப்பி அனுப்பி வைக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணி முகாமைத்துவத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.