இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனா தொற்றுக்கு பலி : சிறப்பு விசாரணைக்கு உத்தரவு!!

710

கொரோனா…

கொரோனா தொற்று நோயால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் பணிப்பு விடுத்துள்ளார்.

பேராதெனிய – முருத்தலாவ பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, இந்த சம்பவம் குறித்து விரைவில் சிறப்பு விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவுக்கு அறிவுறுத்தினார்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் சுகாதாரத் துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய ஒரு சிறப்பு சம்பவம் என்றும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மத்திய மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் மற்றும் சுகாதார சேவைகளின் பிராந்திய இயக்குநரிடமிருந்து அறிக்கைகளைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களான 71 வயதான சிறிபால ராஜபக்ச (தந்தை) ஜூன் 2 ம் திகதியும், 68 வயதான சந்திர ராஜபக்ச (தாய்) ஜூன் 17 ம் திகதியும், 39 வயதான தம்மிக ராஜபக்ச (மகன்) ஜூன் 23ம் திகதியும் கோவிட் தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.