கின்னஸில் இடம்பிடித்த இராட்சத தொலைக்காட்சி!!

329

TV

அமெரிக்காவில் ‘பிக் ஹோஸ்’ என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய இராட்சத தொலைக்காட்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இது போயிங் 767– ரக விமானத்தை விட பெரியது.

இந்த தொலைக்காட்சியின் திரை ‘பனாசொனிக்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 218 அடி அகலமும் 94.6 அடி உயரமும் கொண்டது. அதாவது 7 மாடி அளவு உயரத்துடன் தொலைக்காட்சி தயாரிக்கப்பட்டுள்ளது.

அது 2,852 இஞ்ச் அளவு கொண்டது. இதில் 140 டிகிரி கோணத்தில் படங்களை பார்க்க முடியும்.

இந்த இராட்சத தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அமெரிக்காவின் டெக்சாசின் போர்ட் வொர்த்தில் உள்ள கார் பந்தய மைதானத்தில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்று நிகழ்ச்சிகளை கண்டு இரசித்தனர்.

மேலும் இந்த தொலைக்காட்சி இராட்சத ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டது. ‘பிக் ஹோஸ்’ இராட்சத தொலைக்காட்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.