தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி!!

835

SL

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 10 சுற்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதில் இன்று இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.
இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி துடுப்புடன் களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குஷல் பெரேரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்ப்படுத்தினார்.

40 பந்துகளுக்கு முகங்கொடுத்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்களாக 61 ஓட்டங்களை விளாசினார். மேலும் அஞ்சலோ மத்தியூஸ் 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணி 165 ஓட்டங்களை குவித்தது.

தென்னாபிரிக்கா சார்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுக்களை சாய்த்ததோடு, மோர்னி மோர்கல் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதன்படி 166 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சேனாநாயக்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக குஷல் பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.