படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருவோர் பப்புவா நியூகினியில் தங்கவைக்கப்படுவர்: டோனி அபோட்!!

584

tony

படகுகள் மூலம் பப்புவா நியூகினியின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்போரை மானஸ் தீவுகளில் சில மாதங்கள் தங்கவைப்பதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் உறுதியளித்துள்ளார்.

பசுபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியுகினி அவுஸ்திரேலியாவுக்கான இடைத்தங்கல் பாதையாக கருதப்படுகிறது. எனவே இதனூடாக படகு அகதிகள் ஆசியாவில் இருந்தும் மத்திய கிழக்கில் இருந்தும் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கின்றனர்.

பப்புவா நியூகினிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் அபோட், இரண்டு வருடங்களுக்கு முன்னர் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி சட்டவிரோத குடியேறிகள் பப்புவா நியூகினியில் குடியேற்றப்படுவர் என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துரைத்த பப்புவா நியூகினியின் பிரதமர் பீட்டர் ஓநெய்ல், எதிர்வரும் மாதத்துக்கு முன்னர் இந்த நிரந்தர குடியேற்றத்துக்கான ஒழுங்குகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

எனினும் இதற்காக சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் தமது நாட்டில் குடியேற்றுவதில் கஸ்டம் உள்ளதாக பீட்டர் குறிப்பிட்டார். இதனை டோனி அபோட்டும் ஏற்றுக்கொண்டார்.

சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் வரும் எவரும் நிரந்தர குடியேறிகளாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் என்றும் அபோட் கூறினார். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் சட்டவிரோத படகுகள் அவுஸ்திரேலியாவுக்குள் வருவது தொடரும் என்று அபோட் சுட்டிக்காட்டினார்.

தற்போது மானஸ் தீவுகளில் 1200 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அவுஸ்திரேலியா செல்லும் வழியில் கைவிடப்டபட்ட நிலையில் காப்பாற்றப்பட்டவர்களாவர்.

அங்குள்ள ஒரு அகதி நிலையத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கலகத்தில் 23 வயதான ஈரானியர் ஒருவர் கொல்லப்பட்டு 100 பேர் வரை காயமடைந்தனர்.

இதேவேளை கடந்த ஐந்து ஆண்டுகளில் பப்புவா நியூகினியின் ஊடாக 21 வீத ஆப்கானிஸ்தானியர்களும் 20 வீதமான இலங்கையர்களும் 6 வீத ஈராக்கியரும் 6 வீத பாகிஸ்தானியரும் அவுஸ்திரேலியாவுக்குள் சென்றனர் என்று மதிப்பிப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அகதிகள் மானஸ் தீவுகளில் நிரந்தமாக குடியேற்றப்படுவதை அரசசார்பற்ற அமைப்புக்கள் கண்டித்துள்ள.
சர்வதேச மன்னிப்புசபை இந்த ஏற்பாடு சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயல் என்று குறிப்பிட்டுள்ளது.