ஜப்பானில் உயிரிழந்த இலங்கைப் பெண் : சகோதரிகள் எடுத்துள்ள நடவடிக்கை!!

802

விஷ்மா சந்தமாலி..

ஜப்பானில் உள்ள நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கடந்த மார்ச் மாதம் மரணமான 33 வயது இலங்கை பெண்ணின் சகோதரிகள் நேற்று (ஜூலை 2 ம் திகதி)வழக்குக்கு பொறுப்பான சட்டத்தரணியை சந்தித்து விரைவான விசாரணையைக் கோரினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர், சகோதரிகள் செய்தியாளர்களிடம் தகவல் அளித்தனர். வழக்குக்கு பொறுப்பான சட்டத்தரணி தமது துக்கத்தை உன்னிப்பாகக் கேட்டார் என்றும் அவர்கள் வழக்கை முழுமையாக விசாரிப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் சகோதரிகள் குறிப்பிட்டனர்.

மரணமான விஷ்மா சந்தமாலியின் தங்கைகளான வயோமி(28) பூர்ணிமா(27), மற்றும் அவர்களது சட்டத்தரணி ஷோச்சி இபுசுகி உள்ளிட்ட எட்டு பேர் நாகோயா மாவட்ட பொது சட்டத்தரணிகள் அலுவலகத்தில் வழக்குக்கு பொறுப்பான சட்டத்தரணியுடன் இந்த சந்திப்பை நடத்தினர்.

இதன்போது பதில் வழங்கிய வழக்குக்கு பொறுப்பான சட்டத்தரணி, துயரமடைந்துள்ள குடும்பத்தின் உணர்வுகளையும் அவர்களின் சட்டத்தரணியின் விளக்கத்தையும் தாம் முழுமையாகக் கருத்தில் கொள்வதாக கூறியுள்ளார்.

காவலில் வைக்கப்பட்ட விஷ்மாவின் பாதுகாப்பு கேமராக்களின் காட்சிகளை சட்டத்தரணி பார்த்தாரா என்று சகோதரியும் மற்றவர்களும் கேட்டபோது, ஜப்பானிய சட்டத்தின் கீழ், விசாரணை குறித்த தகவல்களை விவாதிக்க தங்களுக்கு அனுமதி இல்லை.

எனவே விசாரணையின் முன்னேற்றம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். எனினும் விசாரணைகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.