பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!

1326

பாடசாலைகளை திறப்பது தொடர்பில்…

நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளை இந்த மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் அதற்கான சுகாதார வழிக்காட்டல்கள் தயாரித்து அதன் உரிய முறையில் செயற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக என உறுதி செய்த பின்னரே அவ்வாறு பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரிவுகள் தொடர்ந்து கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னரே உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

நாட்டில் 50 மாணவர்களுக்கும் குறைவான 1439 பாடசாலைகள் உள்ளன. 51 முதல் 100 மாணவர்கள் உள்ள 1523 பாடசாலைகள் உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் முதலில் ஆரம்பிக்கப்படும்.

ஏனைய பாடசாலைகள் உரிய முறையில் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-