இணையத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட சிறுமி : இணையத்தள உரிமையாளர் உள்ளிட்டவர்கள் கைது!!

1332

இணையத்தின் மூலம்…

15 வயதான சி.றுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை பிரசுரித்த இணையத்தளத்தின் உரிமையாளரும் அதன் பணக் கட்டுப்பாட்டாளரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

43, 45 வயதான குறித்த நபர்கள் பாணந்துறை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என வி.சாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சி.றுமியின் தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேர் சி.றுமியை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு – கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளமூடாக பா.லி.ய.ல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தொடர்பில் அண்மையில் வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி குறித்த சி.றுமியை பா.லி.ய.ல் நடவடிக்கைளுக்காக இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் கடந்த 9ம் திகதி கைது செய்யப்பட்டார்.

குறித்த பிரதான சந்தேகநபர், கல்கிசையில் வாடகை வீடொன்றில் சி.றுமியை தடுத்துவைத்து இணையத்தளத்தில் சி.றுமியின் நிழற்படத்தை பதிவேற்றி பா.லி.ய.ல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை வி.சாரணைகளில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வி.சாரணைகளுக்க அமைய பலரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.