வவுனியாவில் நடைபெற்ற பாடசாலைமட்ட சதுரங்க சம்பியன் T20 போட்டிகள்!!(படங்கள்)

523

வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த பாடசாலைமட்ட சதுரங்க சம்பியன் T20 போட்டிகள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

இந் நிகழ்வுகளுக்கு திரு.E.நந்தகோபன்( தலைவர்- வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கம்) தலைமை தாங்கினார். மேலும் பிரதம அதிதியாக திரு.R.K.ஆதவன் (யாழ். மாவட்ட சதுரங்க சங்கம்) கலந்துகொண்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி, சைவப்பிரகாச மகளீர் கல்லூரி, விபுலானந்த கல்லூரி, இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை ஆகிய 5 பாடசாலைகளைச் சேர்ந்த 49 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

-பாஸ்கரன் கதீசன்-



1 2 3