வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

1923


விபத்து…


வவுனியா குடியிருப்பு, பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு (06.07.2021) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா நகரப் பகுதியிலிருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.