வவுனியாவில் 8 மணி நேரத்தில் தீர்த்து போன ஆயிரம் தடுப்பூசிகள்!!

1705


தடுப்பூசிகள்..


வவுனியாவில் 8 மணி நேரத்தில் ஆயிரம் கோவிட் தடுப்பூசிகளும் இன்று வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளன. வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சுகாதாரப் பிரிவினரின் ஒத்துழைப்புடன்,வவுனியா நகரம், வவுனியா நகரின் வடக்கு, இறம்பைக்குளம், வைரவபுளியங்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.


மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்ற வருகை தந்தமையால் 8 மணிநேரத்தில் ஆயிரம் பேர் தடுப்பூசிகளை 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றியிருந்தனர்.


இதன் மூலம் முதற்கட்டமாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 1000 தடுப்பூசிகளும் தீர்ந்து போயின. அடுத்து வரும் வாரமளவில் தடுப்பூசிகள் ஏற்றும் பணி மீள இடம்பெறவுள்ளது.