வவுனியா நகர் முழுவதும் ”வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ஷ” என பதாதைகள்!!

1608

பதாதைகள்..

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற மீள் வருகையடுத்து ”வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ஷ” பாராளுமன்ற வருகைக்கு வாழ்த்துக்கள் மற்றும் வடக்கின் வசந்தத்தின் மூலம் பொதுமக்களின் அபிலாசையினை பெற்ற நாயகனின் பாராளுமன்ற மீள்வருகை என பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகள் வவுனியா நகர் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் ஆதரவு தெரிவித்து இவ்வாறு பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.