வவுனியாவில் இடம்பெற்ற கத்திக் குத்தில் குடும்பஸ்தர் படுகாயம் : அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

3377


குடும்பஸ்தர் படுகாயம்..


வவுனியாவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் குடும்பஸ்தரொருவர் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (08.07.2021) இரவு வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.  காயமடைந்த நபர் நேற்று இரவு மகாறம்பைக்குளம் பகுதியில் இருந்து பெரியார்குளம் நோக்கி முச்சக்கரவண்டியை ஓட்டி சென்றுள்ளார்.


இதன்போது பெரியார்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த சாரதியை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-தமிழ்வின்-