
கமலின் மகள் என்பதாலோ என்னவோ அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதே ஸ்ருதிஹாசனுக்கு வாடிக்கையாகி விட்டது.
ஏற்கனவே சின்னப் பொண்ணா இருக்கிற ஸ்ருதி வயசுக்கு மீறி கவர்ச்சியாக நடித்து வருகிறார் என்று பலரும் அவரைப்பற்றி புகார் கூறுகிறார்கள்.
அதில் உச்சமாக ஹிந்தியில் வெளியான ‘டிடே’ படத்தில் விலைமாது கரக்டரில் படு ஆபாசமாக நடித்திருந்தார். படுக்கையறை காட்சிகளில் நாயகனுடன் நெருக்கமாக நடித்து இருந்தார்.
போஸ் கொடுக்கும் போது அமைதியாக இருந்த ஸ்ருதி அந்தப்படத்தை தமிழில் டப்பிங் செய்தபோது மட்டும் எதிர்த்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.
அந்த சர்ச்சை அடங்குவதற்குள் தெலுங்கு படம் ஒன்றில் ஆபாசமாக போஸ் கொடுத்ததாக ஸ்ருதிஹாசனின் போஸ்டரை பொதுமக்கள் கிழித்தெறிந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
அல்லு அர்ஜீன் நாயகனாக நடித்துள்ள ‘ரேஸ் குர்ரம்’ என்ற தெலுங்கு படம் அடுத்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் போஸ்டர்களை சமீபத்தில் ஆந்திராவில் பார்த்த பலரும் முகம் சுளித்தனர். காரணம், போஸ்டரில் அல்லு அர்ஜீன் இரண்டு கைகளையும் ஊன்றிக்க்கொண்டே மேலெழும்பியவாரு போஸ் கொடுக்க, அவரின் இரண்டு கால்களுக்கும் நடுவில் ஸ்ருதிஹாசன் உட்கார்ந்திருப்பது போல இருந்தது.
ஹைதராபாத்தின் முக்கிய சந்திப்புகளில் பெரிய பேனர்களாக வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்களைப் பார்த்த பொதுமக்கள் மிகவும் வக்கிரமாக இருப்பதாகச் சொல்லி கடுப்பாகி போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.
பொதுமக்களின் கோபத்தை கண்ட பொலிஸார் உடனடியாக அந்தப் படத்தின் எல்லாப் போஸ்டர்களையும் அகற்ற உத்தரவிட்டனர்.





