வவுனியாவில் பாடசாலை சமூகத்தினர் 3025 பேருக்கு 12ம் திகதி முதல் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை!!

2018

தடுப்பூசிகள்..

வவுனியா மாவட்டத்தில் பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் உட்பட 3025 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இம்மாதம் 12ம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் 2802 ஆசிரியர்களுக்கும் 205 அதிபர்களுக்கும் 198 பாடசாலை மற்றும் வலயத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களும் ஏற்றப்படவுள்ளது.

அந்த வகையில் வவுனியா வடக்கு வலயத்தில் 926 பேருக்கும் (நெடுங்கேனி 358 பேர், ஓமந்தை 568 பேர்) , வவுனியா தெற்கு வலயத்தில் 2279 பேருக்கும் (தெற்கு சிங்கள பிரிவு 383 பேர் , தெற்கு தமிழ் பிரிவு 1419 பேர், வெங்கல செட்டிக்குளம் 477 பேர் ) என 3205 பேர் உள்ளடங்குகின்றனர்.