வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை : மக்களுக்கு எச்சரிக்கை!!

1660


கடும் காற்று..



வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கின்றது. கடந்த சில நாட்களாக வவுனியா மாவட்டத்தில் கடும் வெப்பம் நீடித்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து கடும் காற்று வீசி வருகின்றது.



வவுனியா மாவட்டத்தில் பரவலாக காற்று பலமாக வீசி வருகின்றமையினால் பாரிய மரங்கள் முறிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனேயே மக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.




கடும் காற்று காரணமாக சில பகுதிகளில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.