வவுனியாவில் இவ் வாரம் 30 வயதுக்கு மேற்பட்ட 45000 பேருக்கு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை!!

2476

தடுப்பூசிகள்..

வவுனியா மாவட்டத்தில் கடந்த வாரம் 60 வயதுக்கு மேற்பட்ட 1000 பேருக்கு முதல் கட்டமாக சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. அதன் இரண்டாம் கட்டமாக சில தினங்களில் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 45,000 பேருக்கு பைஸர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வைத்தியர்கள் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.

அதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு வன்னி இரானுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் கேமந்த பண்டார முயற்சியினால் வவுனியா சுகாதார துறையினரின் ஒத்துழைப்புடன் இவ்வாரம் 45,000ற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வவுனியா மாவட்டத்திற்கு எடுத்து வருவதற்குறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதில் முதன்மை அடிப்படையில் மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தடுப்பூசி வழங்குவதற்கான நிலையங்கள் மற்றும் திகதிகள் என்பன பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.