இலங்கை ஒரே நாடாக இருப்பதே விருப்பம் : பாஜக!!

794

Venkaiah Naiduஇலங்கை ஒரே நாடாக இருப்பதையே விரும்புவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ராஜிவ்காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி இலங்கையில் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு மேலும் பேசுகையில்..

இலங்கையின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம். இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே தமிழர் பிரச்னைக்கான எந்தவொரு தீர்வும் இருக்க வேண்டும்.

இலங்கை அரசில் முடிவு எடுப்பதிலும், தங்களது தலைவிதியை தீர்மானிப்பதிலும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.