பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!!

1197

சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு..

பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஆபாச காணொளிகள் மற்றும் படங்களை வெளியிட்டதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் கணினி குற்றப்பிரிவு சந்தேகநபர்களை கடந்த வாரம் கைது செய்ததாக அவர் கூறியுள்ளார்.

வலைத்தளங்களின் மற்றும் சமூக ஊடகங்களில் பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடும் செயல்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டே, ராஜகிரிய, கண்டி, பிலியந்தலை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 23 முதல் 39 வயதிற்கு உட்பட்ட 4 பேர் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக தண்டனைச் சட்டம் மற்றும் ஆபாச வெளியீட்டுச் சட்டத்தின் கீழ் பொலிஸ் கணினி குற்றப்பிரிவு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று பேச்சாளர் எச்சரித்துள்ளார்.