பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவி தற்கொலைக்கு முயற்சி!!

875

pera

பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். கண்டி வாவியில் குதித்து குறித்த மாணவி நேற்று மாலை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

மாணவி வாவியில் பாய்வதை நேரில் கண்ட இராணுவ சிப்பாய் கண்டி பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து மாணவி காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி தற்சமயம் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி இதற்கு முன்னரும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.