வவுனியா ஊடாக வெளி மாகாணத்திற்கு பயணித்த மூன்று பேரூந்துகள் : கொழும்பு சென்ற இரு பேரூந்துகளுக்கு அனுமதி மறுப்பு!!

1904

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் ரயில்கள் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மாத்திரம் சேவைகளை முன்னெடுத்திருந்தன.

எனினும் வவுனியா ஊடாக வெளி மாகாணங்களுக்கு மூன்று பேரூந்துகள் சென்றதுடன் கொழும்பு சென்ற இரு பேரூந்துகள் ஈரப்பெரியகுளம் இராணுவச்சாவடியில் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேரூந்துகள் இன்று காலை வவுனியா ஊடாக கண்டி மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இடங்களுக்கு சென்றடைந்திருந்துடன், முல்லைத்தீவிலிருந்து கற்பிட்டி நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் சென்றடைந்திருந்தது.

எனினும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக இரு பேருந்துகள் ஈரட்டைபெரியகுளம் இராணுவ சாவடியில் வழிமறிக்கப்பட்டு குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகளிடம் வெளிமாகாணத்திற்கு செல்வதற்காக காரணத்தினை இராணுவத்தினர் கோரியுள்ளனர்.

குறித்த பயணிகள் அத்தியாவசிய தேவை நிமித்தம் செல்கின்றமையை உறுதிப்படுத்தத் தவறியுள்ளமையினையடுத்து கொழும்பு நோக்கி பயணித்த இரு பேரூந்துகளும் ஈரட்டைபெரியகுளம் இராணுவ சாவடியில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பேரூந்துகளில் பயணித்த பயணிகள் அவர்கள் பிரயாணத்தினை ஆரம்பித்த இடத்திலியே இறக்கி விடப்பட்டனர்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வென்னப்புவ சாலை போரூந்து கொழும்பிலிருந்து வவுனியா ஈரப்பெரியகுளம் இரானுவ சாவடியூடாக இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தினை சென்றடைந்த போதிலும்,

குறித்த பேரூந்து மீண்டும் பயணிகளுடன் கொழும்பு செல்ல ஈரட்டைபெரியகுளம் இராணுவத்தினரினால் அனுமதி மறுக்கப்பட்டு தற்போது அப் பேரூந்து வவுனியா இலங்கை போக்குவரத்து சபை சாலையில் தரித்து நிற்கின்றது.