வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் சந்திப்பு!!

1660

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன்..

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜெறல்டின் நிலக்சன் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரின் அலுவலத்தில் இன்று (15.07.2021) மதியம் 1 மணியளவில் இடம்பெற்றது.

நாட்டிலுள்ள பல மாவட்ட மக்களுக்கு தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் 60வயதுக்கு மேற்ப்பட்ட 1000 நபர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டதுடன் சுகாதாரப் பிரிவினர், அஞ்சல் சேவை, பாதுகாப்பு பிரிவினர், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் அதிகளவிலான மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்திற்கு 1000 தடுப்பூசிகளை தவிர மேலதிகமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டவில்லை என்பதனை அமைச்சருக்கு சுட்டிக்காட்டிய வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்,

திருகோணமலை மாவட்டத்தில் டெல்டா நோய் தாக்கம் காணப்படுவதுடன் அவற்றின் தாக்கத்தினை வவுனியா மாவட்ட மக்களும் எதிர்நோக்க நேரிடலாம் எனவே மக்களுக்குரிய தடுப்பூசியினை பெற்றுத்தருமாறு கோரிக்கையும் விடுத்தார்.

கலந்துரையாடல் இடம்பெற்ற நேரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார பிரிவினருடன் தொலைபேசியூடாக தொடர்பினை ஏற்படுத்தி கலந்துரையாடினார்.

அடுத்த இரு வாரங்களுக்குள் வவுனியா மாவட்த்திற்கு முதற்கட்டமாக தடுப்பூசிகளை வழங்குவதாக சுகாதார பிரிவினர் அமைச்சருக்கு வாக்குறுதி அளித்தனர்.