மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

899

பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறிச் செயற்பட்ட 900 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 413 வாகனங்களில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 900 இவ்வாறு எச்சரிக்கப்பட்டதாக,

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் 14 நுழைவாயில்களில் சோதனை சாவடிகள் அமைத்து பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடையை மீறி எவரும் செயற்பட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.