இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!!

1342

அவசர அறிவுறுத்தல்..

இலங்கையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள டெல்டா வைரஸ் பரவல் தொடர்பிலேயே மக்கள் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

டெல்டா திரிபுடனான கோவிட் – 19 பரவலை தடுக்க வேண்டிய பொறுப்பு மக்களிடத்திலேயே உள்ளது. இந்த நோயின் தாக்கம் வீரியமடைந்துள்ளதன் காரணமாக தொற்றானது வேகமாக பரவக்கூடும்.

எனவே அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இல்லையெனில், மீண்டும் டெல்டா திரிபுடனான கொத்தணிகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.