இலங்கையில் பாரதூரமான நிலை ஏற்படலாம் : டெல்டா திரிபு தொடர்பில் கடும் எச்சரிக்கை!!

617

டெல்டா திரிபு..

கோவிட் வைரஸின் திரிபான டெல்டா தொற்றிய 38 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த திரிபு தொற்றிய பலர் சமூகத்திற்குள் இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர்களிடம் நடத்திய பரிசோதனையில் இந்த தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

காணப்படும் நிலைமையில், டெல்டா திரிபு பரவி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் உதவி செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதனிடையே டெல்டா திரிபு மிக வேகமாக பரவும் என்பதால் சுகாதார வழிக்காட்டல்களை கடைப்பிடிக்கவில்லை என்றாால், பாரதூரமான நோய் பரவல் ஏற்படலாம் என தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபு நாட்டில் பரவும் ஆபத்து அதிகம் இருப்பதால், சுகாதார வழிக்காட்டல்களை கடைபிடிக்க வேண்டியது அத்தியவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் டெல்டா திரிபு தொற்றிய 11 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.