50 பவுண் நகையுடன் வந்த மணப்பெண் : மணமகன் கூறிய ஒற்றை வார்த்தையால் நடந்த சம்பவம்!!

1095

கேரளாவில்..

கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் நிலையில், மணமகன் ஒருவர் தனது மனைவி அணிந்துவந்த நகையினை பெண்வீட்டாரிடமே கழட்டி கொடுக்க கூறியுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழா மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ் (28), நாதஸ்வர இசைக்கலைஞர். இவருக்கும் ஆலப்புழாவை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுருதிக்கும் (21) திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மாப்பிள்ளை வீட்டினர் எற்கனவே வரதட்சணை வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில், மணப்பெண் வீட்டினர் சுருதிக்கு சீதனமாக 50 பவுண் நகை அணிந்து வந்துள்ளதை அவதானித்த மணமகன், தனது கொள்கையே வரதட்சணை வாங்க கூடாது என்பது தான்.

மணமகளிடம் உனக்கு விருப்பம் எனில் 2 வளையல்களை மட்டும் அணிந்து விட்டு மீதி நகைகளை கழற்றி பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து தாலி கட்டியவுடன் மணமகள் கழுத்தில் கிடந்த நகைகள் கோவில் பூசாரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்டிய தாலியுடன் மணப்பெண் சுருதியை மனைவியாக ஏற்றுக்கொண்ட மணமகன் சதீசின் செயலை அனைவரும் பாராட்டி வருவதோடு, சமூகவலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.