வடக்கின் பிரதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நியமனம்!!

900


சமன் பந்துலசேன..


வடக்கின் பிரமத செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதியால் இன்று (20.07) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் 9 ஆவது மாகாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.அந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேனவே வடக்கின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.


வெற்றிடனான இப் பதவிக்கு வடக்கைச் சேர்ந்த பலரும் போட்டியிட்டனர். இந்நிலையிலேயே வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றும் எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.