இந்திய மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி!!

261

SL-Women

உலகக்கிண்ண பெண்களுக்கான T20 போட்டிகளில் நேற்று நடைபெற்ற B பிரிவில் 4 ஆவது போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக ஜயங்கனி 43 ஓட்டங்களையும் கௌஷல்யா 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணியை சேர்ந்த பூணம் யாதவ் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 129 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய பெண்கள் அணியினரால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதன் அடிப்படையில் இலங்கை மகளிர் அணி இப்போட்டியில் 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.