சினிமா மோகத்தில் இருந்த 24 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

1105


தமிழகத்தில்..


தமிழகத்தில் இளம் பெண் ஒருவரை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததால், அப்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு பகுதியை சேர்ந்தவர் இந்து. 24 வயது மதிக்கத்தக்க இவர், சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற ஆசை இருந்ததால், தனது நண்பர்கள் மூலம் சென்னைக்கு சென்றுள்ளார்.


அதன் பின், சாலிகிராமம் தசரதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி, சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார். அப்போது அடையாறு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் நட்பு கிடைக்க, இவர் தனக்கு தெரிந்த இயக்குனர்கள் இருப்பதால், அவர்களிடம் கூறி, உடன்க்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.


இதை நம்பிய அப்பெண், அவருடன் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ஒரு கட்டத்தில், இயக்குனர் ஒருவரிடம், உன்னுடைய புகைப்படங்களை காண்பிக்க வேண்டும்.

இதனால் பல வகைகளில் உன்னை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறி, இந்துவை அழைத்து சென்று, தனி அறையில் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது, கட்டாயப்படுத்தி இந்துவுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

அதன் பின், இரவு நேரங்களில் இந்துவை அழைத்து சென்று, சினிமா இயக்குநர்களிடம் அறிமுகம் செய்வதாக கூறி, தனது நண்பர்களையே இயக்குநர்கள் என்று கூறி இந்துவை அறிமுகம் செய்து, அவர்களுடன் பாலியல் உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், கடைசி வரை இந்துவுக்கு சினிமாவில் வாய்ப்பே வாங்கிதரவில்லை. இதுகுறித்து இந்து, கணேஷிடம் கேட்டபோது, அவர் முறையாக பதிலளிக்காமல், தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால்,

தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து இது குறித்து, நேற்று சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.

அவர் புகார் அளிப்பதற்கு முன்பு, அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டே சென்று புகார் அளித்துள்ளார். அதன் பின் வீட்டிற்கு வந்த போது, குடியிருப்பு வளாகத்திலே மயங்கி விழ, அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்த தகவ உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த வந்த பொலிசார் அவரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர். அப்போது அவரின் படுக்கையறையில் கடிதம் ஒன்று இருந்துள்ளது.

அதில், சினிமா ஆசையில் எனது வாழ்க்கையை சீரழித்த கணேஷ் தான் என் சாவுக்கு முழு காரணம். எனக்கும் எனது குடும்பத்திற்கும் எது நேர்ந்தாலும் அதற்கு அவர்தான் காரணம் என்று குறிப்பிட்டு,

தற்கொலைக்கு முயற்சித்திருப்பது தெரியவந்தது. இந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.