வவுனியா உட்பட 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

1533


சிவப்பு எச்சரிக்கை..


இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு பலத்த காற்று தொடர்பான சிவப்பு எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.இதன்படி சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 – 70 வரை வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.