கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!!

1252


கிணற்றிலிருந்து..தம்புத்தேகம – குருகம பிரதேசத்தில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் ஒருவர் பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது, 9 வயதுடைய சமீர பிரசாத் ரத்னாயக்க என்ற சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த சிறுவன் இன்று பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது சுமார் 20 அடி ஆழமான கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவன் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் மேற்கொண்ட தேடுதலின் போது, கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.