வங்கதேசத்தில் நடைபெற்று T20 உலகக்கிண்ணப்போட்டிகளை பாதிக்கும் விதமாக அங்கு கடும் பனிப்பொழிவு நிகழ்கிறது. இது இரவில் விளையாடும் அணிகளுக்கு பெரும் பிரச்சனை அளிக்கிறது.
எனவே நாணயச்சுழற்சியில் வெற்றி பெறும் அணி முதலில் பந்துவீச்சையே தெரிவுசெய்கிறது. இதற்கு முக்கிய காரணம் அடுத்து களமிறங்கும் அணி பனிப்பொழிவை சமாளிக்கவேண்டியுள்ளது.
பயிற்சி பெறும் அணிகள் கூட பந்தை தண்ணீரில் நனைத்து பயிற்சி பெறும் அளவு பனிப்பொழிவு நடைபெறுகிறது. இப்பிரச்சனையை சமாளிக்க ஐசிசி இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. டெல்லி கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் போட்டிகளில் பிரத்யேக கெமிக்கலை ஆடுகளத்தில் தெளித்து பனியை கட்டுப்படுத்தின.
இது நல்ல பலன் கொடுத்ததால் அந்த கெமிக்கலை வாங்கி வங்கதேசத்தில் நடைபெறும் போட்டியில் பயன்படுத்தலாம் என்று ஐசிசி முடிவெடுத்துள்ளது.
இதன் காரணமாக டெல்லி கிரிக்கெட் சங்க ஆடுகள வடிவமைப்பாளர் வெங்கட் சுந்தரத்திடம் ஐசிசி ஆடுகள வடிவமைப்பாளர் அட்கின்சன் உரையாடியுள்ளார்.
மேலும் டெல்லி கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் சபை தலைமை ஆடுகள வடிவமைப்பாளர் டால்ஜித் சிங்கிடம் இந்த குறிப்பிட்ட கெமிக்கல் இந்திய கிரிக்கெட் சபையால் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டது. இதையடுத்து 60 லிட்டர் கெமிக்கலுடன் குழு வங்கதேசத்திற்கு விரைந்திருக்கிறது.





