1000 மடங்காக அதிகரிக்கும் டெல்டா வைரஸின் பரவல் : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!!

804

கொரோனா..

கொரோனா வைரஸ் திரிபு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விட டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் வைரஸ் சுமை சுமார் 1,000 மடங்கு அதிகம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் டெல்டா தொற்று அதிகமாகப் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வின் படி, 2020இல் கண்டறியப்பட்ட வைரஸ் சுமையை விட டெல்டாவின் பரவல் 1000 மடங்கு அதிகமாக இருப்பதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்கள் மத்தியில் தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொள்ளுதல், தனிமைப்படுத்தல் மற்றும் மரபணு கண்காணிப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளே உலக அளவில் டெல்டா மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் என்று சந்திம ஜீவந்திரா தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-