வவுனியாவில் மண்வெட்டியினால் தாக்கியதில் ஒருவர் படுகாயம்!!

542

Fight

வவுனியா தோணிக்கல் சிவன் கோயில் அருகாமையில் நேற்று இரவு கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் இளைஞர் மீது மண்வெட்டியினால் தாக்கியமையினால் பலத்த காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

நேற்று இரவு கிறிஸ்தவ மதபோதகருக்கும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குமிடையே வாய் தர்க்கம் ஏற்பட்டது என்றும் அதனை தொடர்ந்து கோபமடைந்த மதபோதகர் மண்வெட்டியினால் இளைஞனின் தலையில் தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த இளைஞர் வவுனியா வைத்திய சாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் வவுனியா தோணிக்கல்லை சேர்ந்த அஜந்தன் (22) என்று தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அப்பிரதேசத்திற்கு சென்ற பொலிசார் கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.