திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி!!

505

Alagiri

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னதாக தாற்காலிகமாக கட்சியில் இருந்து அழகிரி நீக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், அண்மைக் கால அழகிரியின் நடவடிக்கைகள் கட்சியின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தது என்பதால், அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக இன்று அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி கூறினார்.

அப்போது அவர், நானும் பேராசிரியரும் இது குறித்து ஆலோசனை செய்து, இத்தகைய முடிவுக்கு வந்துள்ளோம் என்று கூறினார்.
மேலும், இரட்டை இலை சின்னம் குறித்து இன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.