கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்கூடு : நீதிமன்றில் வழக்கு தாக்கல்!!

2218


மின் கடத்திக்கூடு..கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்கூடு காணப்பட்டமை தொடர்பில் சுகாதார பரிசோதகர் ஊடாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று பகல் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவு பொதியொன்றை நுகர்வோர் பெற்றுச்சென்றுள்ளனர். குறித்த உணவுப் பொதியில் மின்கடத்திக்கூடு ஒன்று காணப்பட்டமை தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினர் மற்றம் சுகாதார பரிசோதகருக்கு நுகர்வோரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உணவுப்பொதியில் மின்கடத்திக்கூடு காணப்படுவது தொடர்பில் உணவக உரிமையாளரிடம் வினவியபோது, அண்மையில் இலத்திரனியல் உபகரணம் ஒன்று திருத்தப்பட்டுள்ளதாகவும், அதில் காணப்பட்ட மின்கடத்திக்கூடு தவறுதலாக விழுத்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்தள்ளனர்.


இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கடை உரிமையாளரிடம் வினவியபொழுது,தான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாகவும், இவ்விடயம் தொடர்பில் உணவக ஊழியர்களிடம் வினவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த உணவு பொதியை பெற்றுக்கொண்ட நுகர்வோரின் பாதுகாப்பு தொடர்பில் அவரிடம் நுகர்வோர் வினவியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையை மெற்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் மற்றம் கரைச்சி பிரதேச சபையினரின் கவனத்திற்கு நுகர்வோரால் கொண்டு செல்லப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மெற்கொண்டதுடன், குறித்த விடம் தொடர்பில் முறைப்பாட்டினையும் நுகர்வோரிடம் பெற்றுக்கொண்டனர்.


சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் பெற்றுக்கொண்ட சுகாதார பரிசோதகர் உணவகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும் பார்வையிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை அல்லது பிரிதொரு தினத்தில்கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் உணவக ஊழியர்களிடம் குறிப்பிடடிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.