வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளி தலைமறைவான நிலையில் பொலிஸாரால் மீட்பு!!

4988


கொரோனா..


வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த விலைமாது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.


இந்நிலையில் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் குறித்த பகுதியில் நின்றிருந்த பாலியல் தொழிலாளி ஒருவரிடமும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆயினும் குறித்த பெண் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிசாரின் உதவியுடன் இன்று கண்டுபிடிக்கப்பட்டு பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.