வவுனியா நுகர்வோர் அதிகார சபை வாகன விபத்தில் ஐவர் காயம்!!

499

Accidentவவுனியா நுகர்வோர் அதிகாரசபையினர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கொன்றில் பிரசன்னமாகுவதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தின் வாகனமொன்றில் பயணித்த நுகர்வோர் அதிகாரசபையின் வவுனியா மவட்ட பொறுப்பதிகரி எம்.ராஜபக்ச உட்பட ஐவரே காயமடைந்துள்ளனர்.

வழக்கு விசாரணைகளை நிறைவு பெற்றதன் பின்னர் வவுனியா நோக்கி வந்த சமயம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக வாகனத்தில் பயணம் செய்த ஐவரும் காயமடைந்து வவுவுனியா பொது வைத்திசாலையின் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.