இலங்கையில் மேலும் 56 கொரோனா மரணங்கள், 2,455 தொற்றாளர்கள் பதிவு!!

719

கொரோனா..

நாட்டில் மேலும் 56 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (29.07.2021) இந்த கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 30 முதல் 59 வயது வரையிலான 15 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 41 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதில் 38 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட் நோய்த்தொற்று காரணமாக பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 4380 ஆகும்.

கோவிட் தொற்று உறுதியான மேலும் 820 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,455 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 306,657 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4, 380 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.