தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றத்துக்காக கனேடிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவருக்கு நியூயோர்க் நீதிமன்றம் இரண்டு வருட சிறை தண்டனை விதித்துள்ளது.
பிரதீபன் நடராஜா என்ற அவர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விமானங்களை தயாரிப்பதற்கான பொருட்களை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் அவர் தொடர்பான வழக்கு நியூயோர்க் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்த போது, இந்த தண்டனை வழங்கப்பட்டது.
ஏற்கனவே இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷ் சிறிஸ்கந்தராஜா என்பவருக்கு கடந்த ஆண்டு, இரண்டு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இவர்கள் இருவரும் கடந்த 2006ம் ஆண்டு கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.





